கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 737 பேருக்கு கரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 737 பேருக்கு கரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 737 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை 686 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,951-லிருந்து 4,366 ஆக உயர்ந்துள்ளது. 322 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டங்கள்:

அதிகளவாக சென்னையில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 49 பேருக்கும், கன்னியாகுமரியில் 42 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும், கோவையில் 18 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT