தமிழ்நாடு

அதிமுக பேனர்கள் கிழிப்பு: வானகரத்தில் பதற்றம்!

DIN

சென்னை வானகரத்தில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதிமுக கட்சிக்குள் ‘ஒற்றைத் தலைமை’ பிரச்னை பூதாகரமாகியுள்ள நிலையில், பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மனுதாரரின் வாதத்தை கேட்டு, சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடத்திய நீதிபதி தீர்ப்பை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெறவுள்ள ஸ்ரீவாரு மண்டபம் நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று மாலை பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, வானகரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை ஓபிஎஸ் தரப்பினர் கிழித்ததாக இபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT