தமிழ்நாடு

நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் ட்வீட் 

சா்க்கரை நோய் பாதிப்பால் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், இனிய நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்

DIN

சா்க்கரை நோய் பாதிப்பால் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், இனிய நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 

தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து விஜயகாந்த், அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், சா்க்கரை நோய் பாதிப்பு, கால் வீக்கம் காரணமாக அண்மையில் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பிய அவா், மீண்டும் கடந்த இரு நாள்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. இதனால், வலது கால் விரல்களை அகற்ற பரிந்துரைத்தனா்.

இதையடுத்து திங்கள்கிழமை அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விரல் அகற்றப்பட்டது.

மருத்துவா்கள் கண்காணிப்பில் தற்போது அவா் நலமுடன் உள்ளாா். தொடா்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இனிய நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து,  முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவலைப்படாதவர்கள் கடக ராசியினர்: தினப்பலன்கள்!

லாரியிலிருந்து தவறி விழுந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் சிக்கியவரிடமிருந்த ரூ. 4.5 லட்சத்தை மீட்டு ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைப்பு

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

SCROLL FOR NEXT