கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

DIN

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு குறித்த வழக்கு விசாரணையின்போது, கடந்த மூன்று மணி நேரமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவின் மீது நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர, வேறு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்றும் பொதுக் குழுவில் இது நடக்க வேண்டும் என முன்கூட்டியே முடிவு செய்ய இயலாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரி பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை தள்ளுபடி செய்து உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT