முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5,507 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,507கன அடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,507கன அடியாக குறைந்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  மழை குறைந்து வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கி உள்ளது. 

புதன்கிழமை காலை வினாடிக்கு 7,905 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,507கன அடியாக குறைந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் புதன்கிழமை காலை 109.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 108.60 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 76.43 டி.எம்.சியாக இருந்தது.

மழை அளவு: 35.40 மி.மீட்டராக பதிவாகி உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →