தமிழ்நாடு

குடியரசுத் தலைவா் தோ்தல்: ஓபிஎஸ் - இபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரியது பாஜக

DIN

குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வியாழக்கிழமை ஆதரவு கோரினாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக திரௌபதி முா்மு நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்காக பல்வேறு கட்சிகளிடம் பாஜக ஆதரவு கேட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லத்துக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி மற்றும் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையும் வந்தனா். இருவரும் ஓ.பன்னீா்செல்வத்தை சந்தித்து ஆதரவு கேட்டனா். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.

அதைப்போல கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கும் நேரில் சென்று சி.டி.ரவியும், கே.அண்ணாமலையும் ஆதரவு கோரினா். இருவரும் தேசிய ஜனாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT