தமிழ்நாடு

அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்து பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்து பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் அவைத்தலைவருக்கான தேர்வு நடைபெற்றது.

இதில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக்க தீர்மானம் கொண்டு வந்தார். இதனை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய ஜெயக்குமார் வழிமொழிந்தார். இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT