தமிழ்நாடு

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் வர வாய்ப்பு: தமிழ்மகன் உசேன்

DIN

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வர வாய்ப்புள்ளதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று செய்தியாளர்களிடன் கேள்விகளுக்கு பதில் அளித்த அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்த எதிர்ப்புகளுமின்றி ஏகமானதாக என்னை அவைத் தலைவராக தேர்வு செய்தனர். 

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுவது என்பது சகஜம்தான். நாங்கள் அனைவரும் ஒரே கட்சி, ஒரே உணர்வு கொண்டவர்கள். 

ஓபிஎஸ் மீது தண்ணீர் வாட்டர் பாட்டில் வீசப்பட்டது எனக்குத் தெரியாது. நான் பார்க்கவே இல்லை. 

ஜூலை மாதம் நடைபெறும் பொதுக்குழு சமூகமாக நடைபெறும். 

'ஒற்றைத் தலைமை' என்பதுதான் பொதுக்குழு உறுப்பினர்களின் விண்ணப்பம்.  அதுதான் அது நிறைவேறும் என்றார்.

பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் வர வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உசேன், 'கண்டிப்பாக வரக்கூடிய சூழ்நிலைகள் வாய்ப்புகள் இருக்கு' என்றார். 

மேலும் 'ஒற்றைத் தலைமை' தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து பேசுவார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT