குடிமகன்களுக்கு ஜாக்பாட்.. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு 
தமிழ்நாடு

குடிமகன்களுக்கு ஜாக்பாட்.. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெற திட்டம் வகுக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN


சென்னை: டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெற திட்டம் வகுக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்யவேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தற்போது நீலகிரியில் அமல்படுத்துவதுபோல, டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த திட்டம் வகுக்க சென்னை உயர் நீதமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக திட்டத்தை வகுத்து ஜூலை 15அம் தேதிக்குள் அறிக்கை  ஒப்படைக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரியில் மட்டும் 29 லட்சம் மதுபாட்டில்களில் மதுபானங்கள் விற்கப்பட்டதாகவும் அதில் 18 லட்சம் மதுபாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடியக்கரையில் பலத்தக் காற்று

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

உரக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு

SCROLL FOR NEXT