தமிழ்நாடு

கரோனா சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5,912-ஆக உயா்வு

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 5,912- ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,359-ஆக உயா்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 616 பேருக்கும், செங்கல்பட்டில் 266 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரானிலிருந்து உருமாற்றமடைந்து பிஏ-5 புதிய வகை தீநுண்மி கடந்த ஒரு மாதத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் கரோனா தொற்றுக்குள்ளானோரில் மட்டும் 25 சதவீதம் பேருக்கு அந்த வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகரிக்கக் காரணம் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை தகவல்படி 621 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 21,552-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT