தமிழ்நாடு

கொடிசியாவில் வர்த்தக கண்காட்சி: நாளை தொடங்கிவைக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக நாளை கோயம்புத்தூர் வருகிறார்.  

DIN

மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக நாளை கோயம்புத்தூர் வருகிறார்.  

புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், பிற்பகல் 2.40 மணியளவில் கோயம்புத்தூர் வந்தடைகிறார். பின்னர் மருத்துவ துணிகளுக்கான தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க சிறப்பு மையத்திற்கு சாலை வழியாக பயணம் செய்யும் மத்திய அமைச்சர், அங்கு கவுன்சில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 4.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகக் கண்காட்சியை பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்.

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி வலைப்பின்னல் சில்லரை வியாபாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 6.20 மணியளவில் தென்னிந்திய மில்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் பியூஷ் கோயல், தொடர்ந்து தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் அவர்களுடன் இரவு நேர விருந்தில் கலந்துகொள்கிறார். 2-ஆவது நாளான ஜூன் 26 (ஞாயிறு) காலை 10.40 மணியளவில் திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்காவை அவர் பார்வையிடுகிறார். 

பின்னர் நண்பகல் வாக்கில் பாப்பீஸ் ஓட்டலில் ஏற்றுமதியாளர்களை சந்திக்கும் மத்திய அமைச்சர், அங்கு நடைபெறும்  பாராட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் பங்கேற்கும் 2 நாள்  நிகழ்ச்சிகளிலும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்கிறார். 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பின் கோயல், ஜூன் 26 பிற்பகல் 3.15 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து தில்லி புறப்பட்டு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நேரு-காந்தி குடும்பத்தினர் அநீதி இழைத்தனர்: ம.பி. முதல்வர் குற்றச்சாட்டு!

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு!

SCROLL FOR NEXT