சேலம்: காவல் துறையில் பணியாற்றுபவர்கள் இன்று உதவி காவல் ஆய்வாளர் தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 253 காவலர்கள் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேற்று தேர்வு நடைபெற்றது. மேலும், இந்த காலி பணியிடங்களில் 20 சதவீதம் காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் பணியில் சேர்ந்து ஐந்து வருடங்களைக் கடந்த காவலர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு, காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இன்று நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்ட மையத்தில், 253 காவலர்கள் தேர்வு எழுதினர்.
மேலும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக 60 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வு நடைபெறும் அறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.