சென்னை: பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தின் கீழ், இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்த திட்டம் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 62.34 சதவீதம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயணிக்கும் மகளிரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 37.4 லட்சம் பெண்கள் பயணிப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், நாள் ஒன்றுக்கு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளில் 62.36 சதவீதம் பேர் பெண்கள் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.