போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் ஜேசுதாஸ் 
தமிழ்நாடு

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சமூக வலைத்தளத்தில் அறிமுகமான பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து, அந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி மாணவியின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

DIN


ஈரோடு: சமூக வலைத்தளத்தில் அறிமுகமான பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து, அந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி மாணவியின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 2020 கரோனோ காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பிளஸ் 2 பயின்ற போது, ஷேர்ஷாட் என்ற சமூக வலைத்தள செயலி மூலம் கோவையைச் சேர்ந்த ஜேசுதாஸ்(22) அறிமுகமாகி உள்ளார். 

இதனை பயன்படுத்தி கொண்டு சிறுமியின் வீட்டிற்கு வந்த ஜேசுதாஸ், வீட்டில் யாரும் இல்லாத போது பலவந்தப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதனை சிறுமிக்கு தெரியாமல் தனது செல்போனில் ஜேசுதாஸ் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.  

சிறுமியின் தந்தைக்கு புகைப்படங்கள் அனுப்பி தொடர்பு கொண்ட ஜேசுதாஸ், இணையதளத்தில் சிறுமியின் புகைப்படங்களை பதிவேற்றம்  செய்யாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 

இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த மொடக்குறிச்சி போலீஸார் கோவையில் இருந்த ஜேசுதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT