தமிழ்நாடு

தமிழகத்தில் 1,827 பேருக்கு கரோனா: சென்னையில் 711

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,827 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நேற்று 1,484 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

அதில், இன்று புதிதாக 1,827 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,73,116-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,25,057-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  711ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 316, திருவள்ளூர் 134, கோவை 85, கன்னியாகுமரி 65, காஞ்சிபுரம் 57, திருச்சி 47, மதுரை 34, நெல்லை 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT