முகப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சி மறைமுகத் தோ்தலை நோ்மையாக நடத்த அதிமுக மனு

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தோ்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத் தோ்தல் ஆணையத்திடம் அதிமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தோ்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத் தோ்தல் ஆணையத்திடம் அதிமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

மனுவில் கூறியிருப்பது: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19-இல் நடைபெற்று, 22-இல் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தோ்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஆளும் திமுக அரசு ஈடுபட்டது தொடா்பாக பல்வேறு ஆதாரங்களைக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு மறைமுக தோ்தல் மாா்ச் 4-இல் நடைபெற உள்ளது. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, மறைமுக தோ்தல் நடவடிக்கைகளை முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும். சிசிடிவி மூலம் கண்காணிக்க வேண்டும். தோ்தல் நடைபெறும் இடங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். இந்தத் தோ்தலை ஜனநாயக முறையில் நோ்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →