முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள்கிழமை விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை அதிகரித்துள்ளது.

ரஷியா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. 

ஒரு கிராம் ரூ.4,788-க்கும் ஒரு சவரன் ரூ.38,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.70-க்கு விற்பனையாகிறது.


செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,788
1 பவுன் தங்கம்............................... 38, 304
1 கிராம் வெள்ளி............................. 70
1 கிலோ வெள்ளி.............................70,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,782
1 பவுன் தங்கம்............................... 38, 256
1 கிராம் வெள்ளி............................. 69.90
1 கிலோ வெள்ளி.............................69,900

முழு கட்டுரையைப் படிக்க →