தமிழ்நாடு

மகா சிவராத்திரி விழா: கோவை வந்தார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கோவை வந்தடைந்தார். 

DIN

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கோவை வந்தடைந்தார். 

கோவை, ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வர். அந்தவகையில், மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று பிற்பகல் கோவை வந்தடைந்தார். 

தில்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி. ஆர். நடராஜன் வரவேற்றார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, 'உலகில் அமைதி நிலவ வேண்டும் என விரும்புகிறோம். உலகம் ஒரு குடும்பமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எல்லைக்குள் அமைதியாக இருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் அமைதியையும் ஆரோக்கியமான உறவையும் பேணுவதில் இந்தியா எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT