முகப்பு
தமிழ்நாடு

வலுவடையும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: 3 மாவட்டங்களில் நாளை அதிபலத்த மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைவதன் காரணமாக, தமிழகத்தில் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைவதன் காரணமாக, தமிழகத்தில் கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 4-ஆம் தேதி மிக பலத்தமழை முதல் அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது, வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 3) அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த மழை: நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாா்ச் 4: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மாா்ச் 4-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் அதி பலத்த மழையும், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், வேலூா், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாா்ச் 5: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மாா்ச் 5-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், சென்னை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்தமழையும் பெய்ய வாய்ப்புள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.