சென்னை உயர் நீதிமன்றத்தில் காணொலி விசாரணை நிறுத்தம்: தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 7-ஆம் தேதி முதல் காணொலி விசாரணை நிறுத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்ச் 7-ஆம் தேதி முதல் காணொலி விசாரணை நிறுத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்ப் பரவல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கரோனா குறைந்ததையடுத்து நேரடி விசாரணை மட்டும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று கூறியதாவது:
காணொலி, நேரடி விசாரணை என இருவிதமாக விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றன. இதனால், திங்கள்கிழமை முதல் காணொலி விசாரணை நிறுத்தப்படவுள்ளன.
தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி மூலம் வாதிட அனுமதி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து பதிவாளர் பதிலளிக்க உத்தரவிடப்படுவதாக தெரிவித்தனர்.