தமிழ்நாடு

திருப்பூர் துணை மேயர் பதவி இந்திய கம்யூ.க்கு ஒதுக்கீடு

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியானது அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு பதவி ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருப்பூர் துணை மேயர், கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர், பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடி உள்ளிட்ட நகராட்சிகளின் துணைத் தலைவர், வத்திராயிருப்பு, பூகப்பாண்டு, சிவகிரி, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிகள் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT