தமிழ்நாடு

உக்ரைன் போர்: தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு

DIN

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைனின் ரஷியப் படைகள் தொடர்ந்து 8 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அந்நாட்டின் முக்கிய நகரங்களான கார்கிவ் மற்றும் கீவ் நகரங்களில் ரஷியா தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய தூதரகம் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் இக்குழுவில் திருச்சி சிவா(எம்.பி) , கலாநிதி வீராச்சாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் டி.ஆர்.பி ராஜா ஆகிய எம்பி, எம்எல்ஏ-களுடன் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உக்ரைனில் உள்ள 2223 தமிழக மாணவர்களில் இதுவரை 193 பேர் தமிழகம் திரும்பியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT