போடி நகர்மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
போடி நகர்மன்ற தலைவராக ச.ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடுபோடி நகர்மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
போடி நகர்மன்ற தலைவராக ச.ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
போடி: போடி நகர்மன்ற தலைவராக ச.ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
போடி நகர்மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் போடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் 21 ஆவது வார்டு உறுப்பினர் ச.ராஜராஜேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார். நகராட்சி ஆணையாளர் தி.சகிலா வேட்பு மனு பெற்றார்.
போடி நகராட்சி நகர்மன்ற தேர்தலில் ச.ராஜராஜேஸ்வரி மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
நகர்மன்ற தேர்தலின்போது தி.மு.க. உறுப்பினர்கள் 20 பேர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தலா ஒருவர் என 22 பேர் மட்டும் பங்கேற்றனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் 9 பேர், பா.ஜ.க. வேட்பாளர்கள் 2 பேர் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ச.ராஜராஜேஸ்வரி நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் தி.சகிலா மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க.தமிழ்செல்வன், போடி நகர தி.மு.க. செயலர் மா.வீ.செல்வராஜ், முன்னாள் செயலர் ராஜா ரமேஷ், தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் போடி பகுதியில் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கண்ணன், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த திருப்பதி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.