ஆடுதுறை பேரூராட்சியில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி திமுக கூட்டணி போராட்டம்
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் 3 உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடுஆடுதுறை பேரூராட்சியில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி திமுக கூட்டணி போராட்டம்
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் 3 உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சியில் 3 உறுப்பினர்கள் வாக்களிக்க வராததால், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடுதுறை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பான்மைக்கு 8 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், திமுக கூட்டணியில் திமுக 4 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 வார்டுகளிலும், மதிமுக ஒரு வார்டிலும் என 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இவை தவிர, பாமக 4 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதனால், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு திமுகவுக்கும் - பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இப்பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு திமுக கூட்டணியின் வேட்பாளராக 3-ஆவது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரா. சரவணன் அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே, பாமக சார்பில் 12-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம.க. ஸ்டாலின் பேரூராட்சித் தலைவராக முயற்சி செய்து வருகிறார்.இதனால், போட்டி கடுமையாக இருக்கிறது. உறுப்பினர்கள் கடத்திச் செல்லப்படலாம் என காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததால், அவர்களது வீடுகள் முன்பாகவும், முதன்மைத் தெருக்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கு 15 உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் வந்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுகந்தி, மாலதி, மீனாட்சி ஆகிய மூன்று கவுன்சிலர்கள் வரவில்லை. அவர்களைக் கடத்தி விட்டதாக திமுக கூட்டணி பேரூராட்சி தலைவர் வேட்பாளரான ரா.சரவணன் (மதிமுக), மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மகன் கோ.சி.இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கண்ணன், ஹமீம்நிசா ஆகியோர் தலைவருக்கான தேர்தலில் பங்கேற்காமல் அலுவலக முகப்புப் பகுதியில் தரையில் அமர்ந்து தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.