முகப்பு
தமிழ்நாடு

பர்கூர் பேரூராட்சித் தலைவராக சந்தோஷ் குமார் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு

பர்கூர் பேரூராட்சித் தலைவராக சந்தோஷ் குமார் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

அண்மையில் நடைபெற்ற பர்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக 9 வார்டுகளிலும் அதிமுக இரண்டு வார்டுகளிலும் சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் பர்கூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் செந்தாமரை என்பவர் போட்டியிடுவார் என கட்சியின் தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் திமுகவின் போட்டி வேட்பாளராக சந்தோஷ் குமார், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான செந்தாமரை எதிர்த்துப்  போட்டியிட்டார். இதில் திமுகவின் போட்டி வேட்பாளர் சந்தோஷ்குமார் ஒன்பது வாக்குகளும், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செந்தாமரை ஆறு வாக்குகளும் பெற்றனர். 

திமுகவின் போட்டி வேட்பாளரான சந்தோஷ்குமாருக்கு திமுகவைச் சேர்ந்த 6 வார்டு உறுப்பினர்களும் 3 சுயேச்சைகளும் வாக்களித்தனர். செந்தாமரைக்கு 4 திமுக வார்டு உறுப்பினர்களும்  இரண்டு அதிமுக வார்டு உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். அதிக வாக்குகள் பெற்ற திமுகவைச் சேர்ந்த போட்டி வேட்பாளர் சந்தோஷ் குமார் பர்கூர் பேரூராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →