அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கிய காரணமாக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கிய காரணமாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கிய காரணமாக உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் 2021 –2022 பங்கேற்று மருத்துவத் துறை தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறையாற்றினார். முதல்வரின் நல்லாட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பொது மக்கள் நலனில் தொடர்ந்து சிறப்பாக பங்காற்றி வருகிறது. மக்கள் நல்வாழ்வு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய குறியீடாக உள்ளதால் மாநிலத்தில் வாழும் மக்களின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் மனிதவளம் என்பதைத் தாண்டி ஆரோக்கியமான வாழ்வியல் முறையை மக்களுக்கு அளிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகு முயற்சிகளின் மூலம் மக்களின் உடல் நலம் மற்றும் சுகாதாரம் மேம்படுவதும் மருத்துவத்திற்கான செலவினங்கள் குறைகின்றது என்பது கண்கூடு. முதல்வரின் வழிகாட்டுதலின்படி நமது மாநிலம் கரோனா தொற்றை மட்டுமல்லாது இன்னபிற தொற்றும் மற்றும் தொற்றா நோய்களையும் மற்றும் வாழ்வியல் நோய்களையும் சிறப்பான முறையில் எதிர்கொண்டுவருகிறது. ஐ.நா நிறுவனத்தின் “மில்லினியம் டெவலப்மென்ட் கோல்ஸ்” என்கிற குறிக்கோளின்படி நமது மாநிலம் முன்னிலையில் உள்ளது. 2030 திற்குள் ஒரு டிரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டுவது எனும் பொளுளாதார குறிக்கோளை வென்றெடுக்கும். அதே நேரத்தில் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களையும் சேர்ந்தே 2030 திற்குள் அடையும் நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
வளமான சுகாதார கட்டமைப்பு என்பது ஒரு மாநிலத்தின் சிறப்பான வளர்ச்சி குறிக்கோளுக்கு காரணமாக உள்ளது. மேலும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கிய காரணமாக உள்ளது. இந்நேரத்தில் நமது முதலமைச்சரின் தொலை நோக்கு பார்வையில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடையும் குறிக்கோளில் தமிழ்நாடு சுகாதாரத் துறையும் பங்கெடுக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன். மேலும் நமது துறை முக்கிய முன்னெடுப்பான “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்” மூலம் கடந்த சில மாதங்களின் நமது அரசு பொதுமக்களின் இல்லம் தேடி மருத்துவசேவைகள் வழங்குவதையும் மற்ற தொடர்ச்சியான சேவை வழங்குவதை உறுதி செய்து மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றும் பணிகளை செய்வதன் மூலம் உலகிலேயே முன்னோடி திட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 50 லட்சம் மக்களுக்கும் மேலாக பயனடைந்துள்ளனர். அதேபோல் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சாலை விபத்தில் பதிக்கப்பட்டோருக்காக “இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48”கடந்த டிசம்பர் 2021 ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் 48 மணிநேர அவசர உடனடி சிகிச்சை மற்றும் செலவினங்களை அளிக்கப்படும்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, நமது அரசு அலோபதி மருத்துவம் தவிர பிற மருத்துவ முறைகளையும் கோவிட் பெருந்தொற்றின் போது ஊக்குவித்து இந்திய மருத்துவ முறைகளை சிறப்பாக அமல்படுத்தி கோவிட் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது. நமது முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கோவிட் சிகிச்சை அளிக்கப்பட்டு பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் உதவியது. பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கையாள மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு தனது பங்களிப்பாக பல்வேறு வகைகளிலும் பொது அமைப்பு காலங்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டு மக்களுக்கான அத்தியாவசய பொருட்களும் சேவைகளும் தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக செயல்பட்டன என்பதை இந்த வேளையில் கூறிக்கொள்கிறேன். மேலும் தனது பணியாளர்களை தடுப்பூசி போட ஊக்குவித்தமை, ஆக்ஸிஜன் உற்பத்தியில் உதவியது என பலவகைகளில் மேலும் கரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது பணிகளை அமைத்து கொண்டது என பலவகைகளில் முக்கிய பங்காற்றியது இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு. இந்த அரசின் அங்கமாகிய இந்த சுகாதார துறையும் தொழிற்துறையுடன் இணைந்து செயல்பட்டு “அனைவருக்குமான உடல் நலன்” எனும் குறிக்கோளினை அடைய பணிசெய்வோம் என கூறிக்கொள்கிறேன். நமது முதல்வர் கூறியது போல இந்த தமிழ்நாடு அரசானது மக்கள் நலன், தொழில் வளம், சமூக நீதி இவற்றின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து இயங்கிகொண்டு இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேம்பாடுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், அப்போலோ மருத்துவமனை துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டலம் தலைவர் ஊ.மு.ரங்கநாதன், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு தலைவர் மரு. ஊ. சந்திரகுமார், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு முன்னாள் தலைவர் ளு.சந்திரமோகன் அவர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு துணைத் தலைவர் திரு.சத்தியகம் ஆர்யா அவர்கள் மற்றும் முன்னனியினர் உடனிருந்தனர்.