ரூ. 40 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 776 அதிகரித்து ரூ. 39,760 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 776 அதிகரித்து ரூ. 39,760 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் போர்ச் சூழல் காரணமாகவும் பங்குச்சந்தையில் மாற்றம் காரணமாகவும் கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. அதிலும் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை அதிகரித்தது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 776 உயர்ந்து ரூ. 39,760-க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலமாக ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாதவகையில் ரூ. 40 ஆயிரத்தை எட்டியுள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 97 உயர்ந்து ரூ. 4,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 90 பைசா அதிகரித்து ரூ. 73.40-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 73,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.