தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலை. பேராசிரியர் சந்திப்பு

DIN

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச்செயலகத்தில், அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ் சந்தித்துப் பேசினார்.
பேராசிரியர் ஆரோக்கியசமி பால்ராஜ், கம்பியில்லா தகவல் தொழில் நுட்பத்தில் பல்வேறு முக்கியமான கண்டுபிடிப்புகளை படைத்து, உலகளவில் விருதுகள் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதினையும் பெற்றுள்ளார்.

இச்சந்திப்பின்போது, பேராசிரியர் ஆரோக்கியசாமி பால்ராஜ், தமிழ்நாட்டில் உயர் அளவிலான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் அதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், உயர் கல்வி, தொழில், திறன்மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து முயற்சிகள் மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT