தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா; சென்னையில் 51

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 2 பேர் உயிரிழந்தனர். 

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 2 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 158 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இன்று புதிதாக 151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,51,322-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 38,019 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,158-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாக 6,47,95497 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதிகபட்சமாக சென்னையில் 51 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,50,518 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - தனுசு

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

பிப்ரவரி மாதப் பலன்கள் - விருச்சிகம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT