‘கண்ணீர் மல்க நன்றி’: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் இருந்து வருகிறார்.
இதையும் படிக்க | கோவாவில் பெரும்பான்மையைப் பெறுவது உறுதி: ப.சிதம்பரம்
Advertisement
Advertisement
இந்நிலையில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் ஜாமீன் வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது சுட்டுரைப் பக்கத்தில், “அறிவின் 31 ஆண்டு சிறை, நன்னடத்தை, சிறையில் பெற்ற கல்வி, உடல்நிலை ஆகியன கருதி பிணை வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இதற்காக துணை நின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகேஷ் திவேதி, கோபால் சங்கரநாராயணன் ஆகியோருக்கு கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.