தமிழ்நாடு

தனியார் கல்லூரியில் மாணவர் மயங்கி விழுந்து பலி: மாணவர்களிடையே பரபரப்பு

இலுப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


விராலிமலை: இலுப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் வேளாண்,கலை அறிவியல், பொறியியல், நர்ஸிங் உள்ளிட்ட படிப்புகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

இதில், பிசியோதெரபி கல்லூரியில் பி.எஸ்சி., பிசியோதெரபி படிப்பை வேலூர் மாவட்டம் அலமேலு மங்களாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் கோகுல கிஷோர் (19) கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பி.எஸ்சி. பிசியோதரப்பி  முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது கோகுல கிஷோர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பின்னால் வந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் போலீசார் கோகுல கிஷோரின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலுப்பூர் தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறுப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT