முகப்பு
தமிழ்நாடு

பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை 

பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் இன்று (மார்ச் 11) சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்பட்டது. “தடைகளைத் தகர்ப்போம்” என்ற மையப் பொருளுடன் நடைப்பெற்ற இந்த விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பெண்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை வெளிப்படுத்த இயலாத நிலை உள்ளது. 

இதற்கு காரணம் அவர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பதுதான். எனவே பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியமானதாகும். இதனைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பெண்கள் தொழில் தொடங்க முன்னுரிமை அளித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்பையும், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் வீட்டின் உரிமையையும் பெண்களுக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உடைகள் உடுப்பதில் சுதந்திரம் தேவை என்பது தமக்கு உடன்பாடான கருத்து தான் என்றாலும், உடை உடுத்தும் சுதந்திரம் பெண்களுக்கே எதிரானதாக மாறிவிடாமல் பார்த்து கொள்வதும் நமது பண்பாட்டுக்கு ஏற்ப உடைகள் உடுத்துவதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →