தமிழகத்தில் மேலும் 112 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 42,132 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 112 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 13 பேரும், செங்கல்பட்டில் 12 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மற்றொருபுறம் மேலும் 327 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதையும் படிக்க- சீனாவில் ஊரடங்கு: மீண்டும் கரோனா தீவிரம்?
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 12,226-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,461 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனாவுக்கு இதுவரை 38,023 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.