தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்: ஜோதிமணி எம்.பி.

ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல் காந்தியால் மட்டுமே முடியும் என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

DIN

ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல் காந்தியால் மட்டுமே முடியும் என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதவில், இந்த நாட்டைக் காக்க,எவ்வித சமரசமும் இல்லாமல்,ஆர்எஸ் எஸ்/பாஜகவை எதிர்த்துப் போராட தலைவர் ராகுல்காந்தியால் மட்டுமே முடியும். இந்த தேசத்தின் ஆன்மாவை அதற்குரிய அத்தனை மகத்துவத்தோடும் புரிந்துகொண்டுள்ள தலைவர் அவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் உடனே பொறுப்பேற்க வேண்டும்.

எவ்வளவு தோல்விகள் வந்தாலும், துணிச்சலோடு களத்தில் நின்று,போராடி வெல்பவரே உண்மையான தலைவர்.அப்படிப்பட்ட கொள்கை உறுதியும்,மக்கள் மீது மாறாத அன்பும், துணிச்சலும் மிகுந்த தலைவர் ராகுல்காந்தி.அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப்  பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. தோ்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க நிகர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

கிஸ் டிரெய்லர்!

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

SCROLL FOR NEXT