முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் எத்தனை கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் தெரியுமா?

12 - 14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையில் எத்தனை கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
சென்னையில் எத்தனை கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் தெரியுமா?
பகிர்:

12 - 14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையில் எத்தனை கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

சென்னையில் மார்ச் 16ஆம் தேதி காலை நிலவரப்படி 327 கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 45 நோயாளிகளும், அடையாறில் 34 பேரும் உள்ளனர்.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், திருவிக நகர், உள்ளிட்ட நான்கு மண்டலங்களிலும் ஒற்றை இலக்கத்தில் கரோனா  நோயாளிகள் குறைந்துவிட்டனர். இது இப்படியே நீடிக்கும் பட்சத்தில், இன்னும் ஒரு சில நாள்களில் பூஜ்யத்தை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7.50 லட்சமாகவும், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7.41 லட்சமாகவும், கரோனாவுக்கு பலியானோர் 9,068 ஆகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →