முகப்பு
தமிழ்நாடு

கூரை வீடு தீக்கிரை: மனநலம் பாதித்த இளைஞர் கருகி சாவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கூரை வீடு இன்று  மாலை தீக்கிரையான நிலையில், வீட்டுக்குள் கட்டப்பட்டு இருந்த மன நலம் பாதித்த இளைஞர் ஒருவர் உடல் கருகி  உயிரிழந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
தீக்கிரையான குடிசை
பகிர்:


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கூரை வீடு இன்று  மாலை தீக்கிரையான நிலையில், வீட்டுக்குள் கட்டப்பட்டு இருந்த மன நலம் பாதித்த இளைஞர் ஒருவர் உடல் கருகி  உயிரிழந்தார்.

தாணிக்கோட்டகம், ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தவர் லெட்சுமணன் விவசாயத் தொழிலாளி. இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர் சங்கர்(32) மன நலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார்.

முதல் மனைவி ஏற்கனவே காலமாகிவிட்டதால் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட மனைவி ரஜினாவுடன் வசித்து வந்த லெட்சுமணன், கடந்த ஆண்டில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

பெற்றோர் இருவரும் காலமாகிவிட்ட நிலையில்,சித்தி ரஜினாவின் பராமரிப்பில் இருந்து வந்த சங்கர் வெளியிடங்களுக்கு ஓடிவிடாமல் தடுக்கும் வகையில் கூரைவீட்டினுல் சங்கிலியால் கட்டப்படுவாராம். அந்த வகையில், உணவு கொடுக்கப்பட்ட பின்னர் வீட்டினுள் சங்கரை கட்டிப்போட்டுவிட்டு ரஜினா நூறுநாள் வேலைக்கு சென்றுவிட்டார்.

மாலையில் கூரையில் ஏற்பட்ட தீ பரவியது. தீயில் கருகிய சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வாய்மேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →