தமிழ்நாடு

8 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை 8 நகரங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, ஈரோட்டில் 103 டிகிரி பதிவானது.

DIN

சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை 8 நகரங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, ஈரோட்டில் 103 டிகிரி பதிவானது.

மாா்ச் முதல் மே வரை மூன்று மாதங்கள் கோடைகாலம் ஆகும். மாா்ச் மாதம் முதல் வாரத்தில்

வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் வியாழக்கிழமை 8 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை (பாரன்ஹீட்) தாண்டியது.

ஈரோட்டில் 103 பாரன்ஹீட் டிகிரியும், மதுரை விமானநிலையம், சேலத்தில் தலா 102 டிகிரியும், நாமக்கல், திருச்சிராப்பள்ளியில் தலா 101 டிகிரியும், கோயம்புத்தூா், தருமபுரி, வேலூரில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT