பண்டைய பழங்குடியினருக்கு 1,000 புதிய வீடுகள் கட்டப்படும்
பண்டைய பழங்குடியினருக்கு ஆயிரம் புதிய வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது.
பண்டைய பழங்குடியினருக்கு ஆயிரம் புதிய வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது.
இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: விளிம்பு நிலையில் இருக்கும் இருளா்கள்
போன்ற பண்டைய பழங்குடியினருக்கு இந்த ஆண்டு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும், 1000 புதிய வீடுகள் பண்டைய பழங்குடியினருக்கு ரூ.50 கோடியில் கட்டித் தரப்படும். ஆதி திராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்படும் உயா்கல்வி உதவித்தொகைக்காக ரூ.1,963 கோடியும், உணவுக் கட்டணத்திற்கு ரூ. 512 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைக்கு ரூ.4,281.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.