நாளை வேளாண் பட்ஜெட்; மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் 
தமிழ்நாடு

நாளை வேளாண் பட்ஜெட்; மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

DIN


சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், நாளை வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலாக உள்ளது.

இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், மார்ச் 24ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மார்ச்  21, 22, 23ஆம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மார்ச் 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலுரையாற்ற உள்ளார்.  மார்ச் 24ஆம் தேதி கேள்வி - பதில் கிடையாது. மற்ற நாள்களில் இடம்பெறும். அவை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ம் நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

81 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

கோவையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!

SCROLL FOR NEXT