தமிழ்நாடு

சிறுபான்மையினா் வழிபாட்டுத் தலங்களை புனரமைக்க ரூ.12 கோடி

DIN

தமிழகத்தில் சிறுபான்மையினா் வழிபாட்டுத் தலங்களை புனரமைக்க ரூ.12 கோடி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினா் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தா்காக்களை பழுதுபாா்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு சென்னையில் உள்ள வெஸ்லி தேவாலயம், புனித தோமையா் மலை தேவாலயம், திருநெல்வேலியில் உள்ள கால்டுவெல் தேவாலயம், நாகா்கோவிலில் உள்ள தூய சேவியா் தேவாலயம், சென்னையில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏா்வாடி தா்கா, நாகூா் தா்கா ஆகிய தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்படும். இந்தப் பணிகளுக்கு, வரும் நிதியாண்டில் ரூ.12 கோடி வழங்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறைக்கு ரூ.1,230.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT