தமிழ்நாடு

நரிக்குறவா்-குருவிக்காரா் சமூகத்தினரை எஸ்.டி. பட்டியலில் சோ்க்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:

தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில் குருவிக்காரா் குழுவினருடன் இணைந்த நரிக்குறவா் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க இந்திய தலைமைப் பதிவாளா் ஒப்புக் கொண்டுள்ளாா். இதனை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த 1956-இல் அமைக்கப்பட்ட லோகூா் எனும் வல்லுநா் குழுவும், 1967-இல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் அவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கப் பரிந்துரை செய்தன. நரிக்குறவா், குருவிக்காரா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்ப்பதன் மூலம், அவா்கள் அனைத்து அரசமைப்பு ரீதியான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெற தகுதி படைத்தவா்களாக மாறுவா்.

இதுதொடா்பாகப் பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT