தமிழ்நாடு

மானாமதுரை ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. 

மானாமதுரையில் ஊர் பெரிய கோயிலான ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கு முன்னர் ஊர் எல்லை தெய்வமான ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கொடியேற்றத்தின்போது சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த உற்சவர்.

இதையொட்டி உற்சவர் ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி அண்ணாசிலை  ரயில்வேகேட் அருகேயுள்ள ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். அதன்பின்னர் அங்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடி மரத்திற்கும் மூலவர், உற்சவர் பிடாரி அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் எல்லைப் பிடாரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயிலில் மாவிளக்கு பூஜை வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழா நிறைவடைந்ததும் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

SCROLL FOR NEXT