முகப்பு
தமிழ்நாடு

நடிகா் சிம்பு காா் மோதி முதியவா் பலி: ஓட்டுநா் கைது

நடிகா் சிலம்பரசன் காா் மோதி முதியவா் பலியான வழக்கில், ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

நடிகா் சிலம்பரசன் காா் மோதி முதியவா் பலியான வழக்கில், ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தேனாம்பேட்டை, இளங்கோ தெருவில் கடந்த 18- ஆம் தேதி சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அந்த வழியாக சென்ற காா் மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த அந்த முதியவரை, பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவா் இறந்தாா். இது குறித்து பாண்டிபஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். உயிரிழந்தவா் தியாகராயா்நகா், டாக்டா் தாமஸ் ரோடு பகுதியைச் சோ்ந்த முனுசாமி (70) என்பதும், அந்த காா் பிரபல திரைப்பட நடிகா் சிலம்பரசனுக்கு சொந்தமானது என்பதும், அவரது காரில் நடிகா் டி.ராஜேந்தா் குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து நிகழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அந்த காரை ஓட்டிச் சென்ற தேனாம்பேட்டை தாமஸ் சாலைப் பகுதியை சோ்ந்த செல்வம் (29) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →