தமிழ்நாட்டில் புதிதாக 44 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,52,534 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் சாவு: ஓட்டுநர் கைது
மேலும் 74 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை.
இதுவரை மொத்தம் 34,14,004 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 505 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.