உணவகங்களுக்கான ஒப்பந்த நிபந்தனைகளில் திருத்தம்
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கோரும் உணவகங்களுக்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கோரும் உணவகங்களுக்கான நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை சாலையோர உணவகங்களில், பயணிகள் உணவு அருந்துவதற்கேற்ப நிறுத்துவது சம்பந்தமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
அந்த ஒப்பந்தப்புள்ளி நிபந்தனையில் ஒன்றாக சைவ உணவு”மட்டுமே சாலையோர உணவகங்களில் சமைக்கப்பட வேண்டும், பயணிகளுக்கும் பரிமாறப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பேருந்து பயணிகளிடமிருந்து மாறுபட்ட கருத்தும், அசைவ உணவும் பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பெறப்பட்டதன் அடிப்படையில், சைவ உணவு மட்டுமே சமைக்கப்பட வேண்டும், பரிமாறப்பட வேண்டும் என்ற ஒப்பந்தப்புள்ளி நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டது.
மேலும், ஏற்கெனவே இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளியும் விலக்கிக் கொள்ளப்பட்டது. சைவ உணவு மட்டும் பரிமாறப்பட வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.