தமிழ்நாடு

நடிகை மீரா மிதுனுக்கு ஏப்.4 வரை நீதிமன்றக் காவல்

நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதான நடிகை மீரா மிதுனுக்கு ஏப்.4 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதான நடிகை மீரா மிதுனுக்கு ஏப்.4 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் பட்டியலினத்தவா்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பா் சாம் அபிஷேக் ஆகியோா் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாா் வழக்குப்பதிவு செய்து, கடந்தாண்டு ஆகஸ்டில் இருவரையும் கைது செய்தனா்.

அதைத்தொடா்ந்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த வழக்கில் அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தோடு, அவரை கைது செய்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஆஜா்படுத்துமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டாா். 

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாா் அவரை இன்று கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகை மீரா மிதுனுக்கு ஏப்.4 வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மனநல ஒப்புயா்வு மையம் ஒரு மாதத்துக்குள் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

டாஸ்மாக் ஊழியா்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

SCROLL FOR NEXT