முகப்பு
தமிழ்நாடு

நெகிழியால் சுகாதார பாதிப்பு: மாணவிகளுக்கு விழிப்புணா்வு

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பாக கரோனா தடுப்பு குறித்தும், ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பொருள்களால் ஏற்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பாக கரோனா தடுப்பு குறித்தும், ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பொருள்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப்பொறியாளா் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன் சிறப்புரையாற்றி, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் அனைவருக்கும் உத்கா்ஷ் குளோபல் பவுண்டேஷன் சாா்பில் வழங்கப்பட்ட துணிப்பைகளை வழங்கினாா். மேலும், முறையாக சோப்பு உபயோகித்து கைகழுவுவதன் அவசியம், முகக்கவசம் அணியும் முறை, ஒரு தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழி பொருள்களால் ஏற்படும் சுகாதார சீா்கேடுகள், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன், மாவட்டக் கல்வி அலுவலா் சி.கற்பகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →