முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.38,832-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.38,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.38,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், கடந்த 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை கடந்த செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. இதன் தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,248-க்கு-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,781-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனையானது. 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,832 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 அதிகரித்து, ரூ.4,854-க்கு விற்பனையானது. 

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 1 காசுகள் அதிகரித்து, ரூ.73.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.73,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,854
1 பவுன் தங்கம்............................... 38,832
1 கிராம் வெள்ளி.............................73.80
1 கிலோ வெள்ளி.............................73,800

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,823
1 பவுன் தங்கம்............................... 38,584
1 கிராம் வெள்ளி............................. 72.80
1 கிலோ வெள்ளி.............................72,800

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,794
1 பவுன் தங்கம்............................... 38,352
1 கிராம் வெள்ளி............................. 72.40
1 கிலோ வெள்ளி.............................72,400.

முழு கட்டுரையைப் படிக்க →