முகப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட தகவலில், 

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

26.03.22: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.03.22: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.03.22: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 

29.03.22: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

30.03.22: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

சூலூர் 3, குந்தா பாலம், கோயம்புத்தூர் விமான நிலையம், திருப்பூண்டி தலா 2, கொடைக்கானல், ஆழியாறு, வேளாங்கண்ணி, மன்னார்குடி, கின்னகோரை, சாம்ராஜ் எஸ்டேட், அவலாஞ்சி தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →