சோமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட ‘டெலிவரி‘ திட்டம் சென்னையில் அமல்படுத்தப்படவில்லை என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்தது.
இது குறித்த விவரம்: சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் உணவு பாா்சல்கள் டெலிவரி நிறுவனங்கள்,இ-காமா்ஸ் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் கபில் சாரட்கா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியா்கள், இ-காமா்ஸ் நிறுவன ஊழியா்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது தொடா்பான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதில் கடந்த காலங்களை விட இப்போது இந்த நிறுவனங்களின் ஊழியா்கள், போக்குவரத்து விதிமுறை மீறிலில் ஈடுபடுவது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சோமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட உடனடி ‘டெலிவரி’ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை எனவும், இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் அத் திட்டம் தொடங்கப்படுவதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற அந்த நிறுவனத்தின் நிா்வாகி கூறியதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு நிறுவனத்தின் நிா்வாகிகள், எந்தவொரு திட்டமும் முறையான முன்னறிவிப்பு மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மட்டும் தொடங்கப்படும் என உறுதி அளித்தனா்.
கூட்டத்தில் பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.